செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதை தமிழகத்தினுடைய கருப்பு நாளாக பார்க்கின்றேன், அதாவது மின் கட்டண உயர்வை நான் ஏற்றி தான் ஆகுவேன், அது ஜனநாயக முறையில் மக்கள் என்ன போராட்டம் செய்தாலும் அதைக் கேட்க மாட்டேன், காரணம் என்னவென்றால் அடுத்த எலக்சன் வருவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது.
அதனால் நீங்கள் போராட்டம் செய்தால் நான் ஏன் கேட்க வேண்டும், அடுத்த அசெம்பிளி எலக்சன் வருவதற்கு நாலு வருடம் இருக்கிறது மக்கள் மறந்து விடுவார்கள். அடுத்த பிரச்சினை வரும் மக்கள் மறந்து விடுவார்கள், மின் கட்டண உயர்வை வந்து இரண்டு மாதத்தில் மக்கள் மறந்து விடுவார்கள் என்பது திமுகவின் உடைய செயல்பாடாக இருக்கிறது, அது யார் பார்த்தாலும் நமக்கு தெரிகிறது.
இந்த நேரத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி விட்டோம், மக்கள் போராட்டம் செய்கிறீர்கள், நீங்க என்ன ஆட்சியை பிடுங்கி விடுவீர்களா ? என்பது இன்னொரு மனோபவம், அமைச்சர் பேசுகின்ற பேச்சு எல்லாவற்றிலுமே தெளிவாக தெரிகிறது. இதற்கு ஒரே ஒரு வழி என்பது மக்களுக்கு இந்த கோபம் என்ன இருக்கிறதோ, நாம் ஏற்கனவே சொல்லி இருந்தோம் இந்த ஆட்சியினுடைய கையாளாகாத தனத்தை இரண்டு ஆண்டுகள் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.
மிக குறிப்பாக 2024 பாராளுமன்ற தேர்தல் வரை, ஏனென்றால் மக்களுக்கு வேறு வழி இல்லை. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் இருக்கிறது என்பதை வந்து ஒரு அமைச்சர் திரும்பத் திரும்ப சொல்லி, முதலமைச்சர் காது கேட்காதவர் போல் இந்த மின் கட்டண உயர்வு விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறார்.
இது கருப்பு நாள் ஜனநாயகத்தை எதிராக இவருடைய செயல்பாடுகள் இருக்கிறது. நம் ஏற்கனவே சொல்லியது போல சில கார்ப்பரேட் கம்பெனிகளை பிடிக்க வைப்பதற்காக தான் தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம், TNEB-யை நடத்துகிறார்கள் இதில் எந்த மாற்றுக் ,கருத்தும் இல்லை. இதற்கான பதிலடியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் மறக்க மாட்டார்கள். தேர்தலில் அவர்களுக்கு கிடைக்க கூடிய அடி என்பது மிகப்பெரிய அடியாக இருக்கும். திமுக தனது வாழ் வரலாற்றில் பார்க்காத ஒரு பாடம் 2024-ல் தமிழக மக்கள் புகட்டுவார்கள், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்தார்.