விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது கடந்த 2017 ஆம் வருடம் முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி 5 சிசன்கள் முடிந்து தற்போது ஆறாவது சிசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக இருக்கின்றவர்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது.
மகேஸ்வரி, மைனா, ரட்சிதா, ஜனனி, நிவாஸினி, குயின்சி என தொடர்ந்து பல பெண்களிடம் மோசமான விதமாக நடந்து கொள்கின்றார். இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். அசல் கோலார் மற்றும் நிவாஷினி இருவரும் காதலித்து வருவதாகவும் ஒரு செய்தி பரவி வருகிற சூழலில் அதற்கு தகுந்தார் போல் இவர்கள் இருவரும் சற்று நெருக்கமாக பழகி வருகின்றார்கள். இந்த சூழலில் நேற்று ஒளிபரப்பான எபிசோடு நிவாvனி மற்றும் அசல் கோளாஷி எல்லை மீறி நடந்து கொள்ளும் விஷயத்தின் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.