விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017 ஆம் வருடம் முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்திருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் நேற்று ஜி பி முத்து வெளியேறியுள்ளார் தனது மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் எடுத்திருக்கும் இந்த முடிவை அனைவரும் மதித்திருக்கின்றனர்.
ஜி பி முத்துவின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்திருக்கிறது இந்த சூழலில் ஜிபி முத்துவிற்கு பதிலாக பிரபல நடிகர் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருக்கின்றார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்களும் சற்று உற்சாகம் அடைந்திருக்கின்றனர் மேலும் வரும் வாரத்தில் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை.