பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ் சீசன்5’ நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடைசியாக இசைவாணி எலிமினேஷன் ஆனார். இதனிடையே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நிறைய டாஸ்க் கொடுத்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த புரோமோவில், சிபி-அக்ஷாரா இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. இதனால் கோபமான அக்ஷாரா வீட்டில் இருந்து ஒரு பொருளை தள்ளிவிட்டு கோபமாக செல்லும் பரபரப்பு புரோமோ வெளியான நிலையில், அடுத்த புரோமோவில் அக்ஷாராவை Confession ரூம்க்கு பிக்பாஸ் அழைக்கிறார்.