பிக்பாஸில் இருந்து 5 லட்சம் பணத்துடன் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் அனைவரும் அவர்களின் உறவினர்கள் வருகையால் சந்தோஷமாக உள்ளனர். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் போட்டியாளர்களுக்கு ஒரு டீல் பிக்பாஸ் கொடுப்பார்.
அதன்படி 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவிப்பார். அந்த வகையில், கடந்த சீசனில் கேப்ரியலா அந்த பணத்தோடு வெளியேறினார். இந்நிலையில், இந்த சீசனில் 5 லட்சம் பணத்துடன் அமீர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.