பிக் பாஸ் 5ல் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி முதல் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள்தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியலும் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன.
இந்த பட்டியலில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா,நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ராஜு, நடிகை பிரியாராமன்,நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, நடிகை பவானி ரெட்டி,நடிகை சூசன், பாடகி சின்னப்பொண்ணு மற்றும் இசைவாணி ஆகியோர்கள் கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாயின.
மேலும்,ஷகிலா மகள் மிலா,மாடல் நடியா, மாஸ்டர் பட பிரபலம் சிபி சந்திரன், நமிதா மாரிமுத்து, நடிகர்கள் கோபிநாத் ரவி, வருண், நிரூப் நந்தா,மற்றும் விஜே அபிஷேக் ஆகியோர்களின் பெயர்களும் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.