பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமலக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என தகவல் பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது கொரோனா அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி இவருக்கு பதிலாக அவருடைய மகள் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குவார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால் தற்போது, இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகையான ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.