பிக்பாஸ் 5 வீட்டில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் மக்களுக்கு தெரிந்த முகங்களாக இல்லை. அதில் ஒருவரான திருநங்கை நமிதா மாரிமுத்து, அவர்களின் கதை மூலம் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்டு வந்தார்.
இந்நிலையில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நமிதா பொருட்களை சேதப்படுத்தியதாகவும், அதிக அளவு உணர்ச்சிவசப்பட்டதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.