பிக்பாஸ் சீசன் 5 இன் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, அபிஷேக் இரண்டாவது போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகியுள்ளார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்துள்ளது. அதில் போட்டியாளர்கள் பலபேர் பிரியங்காவை நாமினேட் செய்திருப்பதாக தெரிகிறது.