பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சி தற்போது தான் விறுவிறுப்பாக செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து நடியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி என 4 பேர் எலிமினேஷன் ஆகியுள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் பொம்மை டாஸ்க் கொடுக்கிறார். இந்த டாஸ்கில் பிரியங்கா செய்த வேலையால் இவரை பொம்மை போட்டியில் இருந்து வெளியேற்றுவதாக பிக்பாஸ் அறிவிக்கிறார்.