பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.
‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. 50 நாட்களை கடந்து மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்றவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், நிரூப் சில காரணங்களுக்காக பிரியங்காவிடம் கடும் சண்டை போடுகிறார்.