பிரபல நடிகருடன் ராஜு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராக இருப்பவர் ராஜு. இவர் தமிழில் வெளியான ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.