பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வரைக்கும் இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் நாட்களில் சுவாரசியமாக ஏதாவது நடக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புரோமோவில் விஜயதசமியை கொண்டாட போட்டியாளர்கள் அனைவரும் வேடம் போட்டு தயாராகின்றனர். இதனிடையே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார். இந்த எபிசோடை பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.