பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, சென்ற வாரம் இந்த வீட்டிலிருந்து சுருதி எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மதுமிதா தான் குறைந்த வாக்குளை பெற்றுள்ளதால் இந்த வாரம் வெளியேறுவார் என கூறப்படுகிறது.