விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்துவிட்டது. இந்த நிலையில் ஆறாவது சீசன் ஆரம்பிக்க உள்ளது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீனனில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில், தொகுப்பாளர் டிடி, பாடகி ராஜலட்சுமி, தொலைக்காட்சி நடிகைகள் அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, கதாநாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிப்பார்க்கப்படுகிறது.
Categories