டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மும்முரமாக ஒளிபரப்பாகிக் வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக நாளுக்குநாள் போட்டிகளும் கடுமையாக நடைபெற்றுக் கொண்டி இருப்பதால் பிக்பாஸ் ரசிகர்களும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த போட்டியின் போது வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாதியில் இருந்து என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஏனெனில் நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கின்போது 6 மணிநேரம் பயில்வான் பாலாஜிக்கு ஈடுகொடுத்து சைக்கிளிங் செய்துள்ளார். இதன் காரணமாக ரம்யா பாண்டியனுடன் பாலாஜி சரிக்குசரி போட்டி போடும் சூழ ஏற்பட்டது. முன்பே ரம்யா பாண்டியன் கலந்துகொண்ட பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சிவானி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் 4 மணி நேரத்திற்கும் மேலாக எடைகொண்ட கயிற்றை இழுத்து பிடித்து சிங்க பெண்ணாகவே பிக்பாஸ் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள்.
அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் தனது பிசிகல் டாஸ்கின்போது பிற போட்டியாளர்களை மிரளவிடும் அளவிற்கு சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக சைக்கிளிங் செய்தது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அத்துடன் தனது இடுப்பை காட்டி பெரும்பாலான ரசிகர்களை வசியம் செய்திருக்கும் ரம்யா பாண்டியன், இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் மேலும் ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறார். ஆகவே பிக்பாஸ் அல்டிமேட்டின் டைட்டில் வின்னராக பாலாஜி முருகதாஸ் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் ஒருவராகதான் இருப்பார்கள் என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் கணிக்கின்றனர்.