பவானி ரெட்டியின் போட்டோஷூட் புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவானி ரெட்டி.
மேலும், இந்த நிகழ்ச்சியின் பைனல் வரைக்கும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருந்தது. இந்நிலையில், இவர் ஒரு இதழின் அட்டைப்படத்திற்காக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோஷூட் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இவரின் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.