பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக செய்து நடனமாடியுள்ள வீடியோக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.இந்நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்னும் புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் மோகன் வைத்தியமும், சாண்டி மாஸ்டர் ஆகியோரும் பிரபல பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.