பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்தின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் பிக்பாஸ்வீட்டில் அனைவரோடும் சண்டை போட்டு அதிகமாக பேசி வந்தார். மேலும் ஆரியிடம் தன குடும்பத்தை பற்றி பேச வேண்டாம் என்று ஆக்ரோஷமாக பேசினார். இதன் காரணமாகவோ, என்னவோ கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே சிறிய நாட்களிலேயே அவருடைய தந்தை ஆர்.சி சம்பத் இன்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவர் பெங்களூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூகம் பயனடையும் வகையில் சம்பத் ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனிதா சம்பத்தின் தாயார் இதழ் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.