பிக்பாஸ் பிரபலம் ஜனனியின் புதிய தொழிலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். சமீபத்தில் இவர் தனது பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் நடிகை ஜனனி தனது தங்கையுடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன்படி வெளிநாட்டிலிருந்து மாடர்ன் உடைகளை இறக்குமதி செய்து அதனை தானே அணிவித்து விளம்பரம் செய்து விற்பனை செய்து வருகிறார். நடிகை ஜனனியின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வைக்கின்றனர்.