Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் முகெனின் ட்ரெண்டிங் சாங்…. வெளியான ப்ரோமோ…!!!

பிக்பாஸ் பிரபலம் முகேனின் ட்ரெண்டிங் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதை வென்றதோடு டைட்டில் வின்னரும் ஆனவர் முகேன் ராவ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மேலும் இவர் பல பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

ஸ்கை மேன் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகள் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலன் எனும் திரைப்படத்தில் முகேன்ராவ் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் முகேன்ராவ்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார்.

மேலும் பிரபு, தம்பி ராமையா, சூரி, மரியா வின்சென்ட், ராகுல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வரும் 8ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் முகேன் ராவின் ட்ரெண்டிங் பாடலான இப்பாடலின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

Categories

Tech |