பிக்பாஸ் 5 யில் சிவகார்த்திகேயன் போல் நடந்துகொள்ளும் போட்டியாளருக்கு ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ராஜு ஜெயமோகன். இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார்.
பாக்யராஜின் சிஷ்யனான இவரை ரசிகர்கள் ராஜு பாய் என்று அழைக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே இவர் போட்டியாளர்கள் மத்தியில் மிகவும் நகைச்சுவையாகவும் கலகலப்பாகவும் இருந்துவருகிறார். இந்நிலையில், இவர் தற்போது நடந்து கொள்ளும் விதம் மற்றும் பேச்சு எல்லாமே சிவகார்த்திகேயன் போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், நீங்கள் கவின் மற்றும் சிவகார்த்திகேயன் நண்பன் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால், நீங்கள் அவர்களைப் போல் பின்பற்றாமல் நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். அதோடு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் யாருக்குமே இவர் சிவகார்த்திகேயன் போல் நடந்துகொள்வது தெரியவில்லையா என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர். இவர் கவின் நடிப்பில் வெளிவந்த ”நட்புனா என்னனு தெரியுமா” திரைப்படத்தில் அவருடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.