பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடியுள்ள வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஆரி வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் சில படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.
இந்த சீசனில் பெரிதும் பேசப்பட்ட ஜோடிகள் தான் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி. இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா, பாலாஜி மற்றும் ஷிவானி ஆகிய 3 பேரும் இணைந்து நடனமாடி உள்ளனர். இந்த வீடியோ காட்சியை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/reel/CN3_BDMjVFB/?igshid=1aicmmrj84vxj