Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஹவுஸில்…. அமுதவாணனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது ஏன்…? காரணம் இதோ….!!!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வீட்டில் அமுதவாணனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள காரணம் தெரிய வந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக உள்ளார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் அகம் டிவி வழியே பிக் பாஸ் போட்டியாளர்களை சந்திக்கின்றார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அமுதவாணனிடம் பேசிய அவர் நோகாம நுங்கு தின்பது பற்றி பேசினார். இது அமுதவாணனுக்கு பொருந்தும் என்று கூறியுள்ளார்.

நோகமா நுங்கு தின்னு நொந்து போனது அமுதவாணன் என்று கமல் அவரை ஜெயிலுக்கு அனுப்பியதை கூறினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக  கூறியதாவது, “எப்போதுமே பிக்பாஸிடம் சாக்லேட் கேட்போம், சிக்கன் கேட்போம் எது கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க சார். அந்த மாதிரிதான் எதார்த்தமா என் தம்பியை வெளியே விடுங்கள் அவருக்கு பதிலா நான் ஜெயிலுக்கு போறேன்னு சொன்னேன்.

சொன்ன அடுத்த நிமிஷமே அமுதா உங்க கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது நீங்கள் ஜெயிலுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க. அப்போதான் சார் தெரிஞ்சுது எதிர்பாராததை எதிர்பாருங்கன்னு சொன்னதற்கான அர்த்தம் தெரிந்தது” என்று கூறி கமலையே சிரிக்க வைத்து விட்டார். மேலும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டிஆர்பி டாஸ்க்கில் அமுதவாணன் தலைமையிலான டிவி சேனல்தான் அதிக டிஆர்பியை பெற்றுள்ளது. அதனால் அடுத்தவார தலைவர் போட்டிக்கு நேரடியாக தேர்வானார் அமுதவாணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |