Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ்…. இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தானா…? கசிந்த தகவல்…!!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலஹாசன் சமீபத்தில் வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இந்தியா திரும்பிய போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கமல்ஹாசன் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் இந்த வார நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி குறித்த புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து  ஐக்கி பெர்ரி வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |