பிக்பாஸ் பிரபலம் ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் ஆரி. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்த வகையில் இவர் நெஞ்சுக்கு நீதி, அலேக்கா மற்றும் பகவான் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்களை தொடர்ந்து நடிகர் ஆரி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி SAS புரொடக்ஷன்ஸ் சார்பில் யோகராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரி ஹீரோவாக நடிக்க உள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக அஞ்சு குரியன் நடிக்கிறார். மேலும் மனோபாலா, ஈரோடு மகேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
#AAA @Aariarujunan's next #SASProductions ProdNo1 *ing @AnjuKurian10 #RamachandraRaju #ThamanKumar #ErodeMaghesh @manobalam @RedinKingsley started with Pooja
Dir by #ManiVarman @kg_ratheesh2 #SreeSaiDev @Sanlokesh #SjRam @Viveka_Lyrics @Lyricist_Vivek @iamSandy_Off @onlynikil pic.twitter.com/UlZU9mMYgr
— Nikil Murukan (@onlynikil) January 5, 2022