சம்யுக்தா ஜிம்மில் வொர்க் அவுட் செய்த பின் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா. மாடலாக இருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் சமீபத்தில் வெளியான ‘துக்ளக் தர்பார்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் தற்போது சில திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்த பின் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CXTEfPPFU2t/?utm_source=ig_embed&ig_rid=d0b6f02e-3a93-436b-84e8-7b41ceb252a2