Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸ் சீசன் 4” நான் பங்கேற்கிறேன்….? விளக்கமளித்த பிரபல நடிகை…!!

நடிகை சுனைனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியதை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இந்திய தொலைக்காட்சிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிந்துள்ளது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக வருகின்ற செப்டம்பர் மாதம் இதற்கான முதல் கட்ட பணிகளை தொடங்க பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில் சீசன்-4 ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகைகள் அதுல்யா, சுனைனா, ரம்யா பாண்டியன் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. ரசிகர்கள் பலரும் அந்தந்த நடிகைகளிடம் கேள்விகளை எழுப்பி வந்தனர். நடிகை சுனைனா பிக்பாஸ் நாலாவது சீசனில் பங்கேற்பதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றால் என்னுடைய படங்களை யார் முடித்துக் கொடுப்பது என யோசிக்கிறேன். நான் எப்பொழுதும் எந்த ஒரு ரியாலிட்டி ஷோவிலும் பங்கு பெற விரும்பவில்லை.” என்று சுனைனா கூறியுள்ளார். இதேபோல நடிகை ரம்யா பாண்டியனும் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |