பிக் பாஸ் சீசன் 5 வில் குக் வித் கோமாளி பிரபலமும் பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கூடிய விரைவில் தொடங்க இருப்பதால் ரசிகர்கள் பலரும் இந்நிகழ்ச்சியை காண ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் பிக் பாஸ் சீசன் 5ல் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, பவானி ரெட்டி, நடிகை ஷகிலாவின் மகள் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்ற தகவல் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டில் வின்னர் கனியும் பிக் பாஸ் 5ல் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.