சுஜா வருணி புதிதாக சீரியலில் நடிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்” இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சுஜா வருணி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு நன்கு பரிச்சயமானார்.
இந்நிலையில், இவர் புதிதாக சீரியலில் நடிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ சீரியலில் இவர் ஸ்பெஷல் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.