விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது போட்டியாளர்களுக்கு திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்களிடைய பல்வேறு சண்டைகள் வந்தது. குறிப்பாக தாமரை மற்றும் அபிநய் இடையே சண்டை அதிகமானது. இதனையடுத்து, தாமரையை வீட்டை விட்டு வெளியேறும்படி அபிநய் கூறினார். அதற்கு தாமரை ‘நீயே உள்ள இருக்க, நான் எதுக்கு வெளிய போகணும்? என கத்தினார். மற்ற போட்டியாளர்கள் டென்ஷனாக வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.