‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனின் போட்டியாளர் ராஜு டைட்டிலை வென்றார்.
இதனையடுத்து, தற்போது ‘பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி’ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசனுக்கு பதிலாக தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ஆகும் போட்டியாளர்கள் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன்படி, இந்த வாரம் சினேகன் அல்லது தாடி பாலாஜி தான் எலிமினேஷன் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.