Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டில்…. இப்படியொரு போட்டியாளரா….? குட்டி த்ரிஷா ஜனனி செய்யும் செயல்….!!!

இலங்கை நாட்டை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி “பிக் பாஸ் 6” சீசனில் போட்டியாளராக வந்திருக்கின்றார். “த்ரிஷாவாக போகிறேன்” என நான் பள்ளி படிக்கும்போதே டீச்சரிடம் சொன்னேன் என ஜனனி சொன்னது வைரலானது. இதனை அடுத்து த்ரிஷாவை நேரில் பார்க்கும்போது சொல்கின்றேன் என கமல் கூறியுள்ளார். மேலும் ஜனனிக்கு தற்போதே ட்விட்டரில் ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டார்கள். அவரது போட்டோக்களும் ட்விட்டரில் அதிகம் வைரலாகி வருகின்றது.

தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஷோ 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் அனேக நேரங்களில் ஜனனி யாருடனும் பேசாமல் தனிமையில் தான் அமர்ந்திருக்கின்றார். எப்போதாவது மட்டுமே மற்ற போட்டியாளர்களிடம் பேசுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் நடுவில் பிரச்சனை வந்து அவர்கள் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தாலும் அவர் கண்டுகொள்வதில்லை. மேலும் டீ போடுவது, பழங்கள் சாப்பிடுவது மற்றும் உணவு உள்ளிட்டவை தொடர்பாக எல்லோரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போது ஜனனி மட்டுமே அதை கண்டுகொள்ளாமல் தூரமாக சேரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். இவற்றை நீங்களே  போட்டோவில் பாருங்க?

Categories

Tech |