Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிற்குள் மரியாதை இல்லாத பேச்சா….? வைரலாகும் ப்ரோமோ ஷோ….!!!

“பிக் பாஸ் 6”  சீசனில் விறுவிறுப்பாக  நடைபெற்று வரும் இந்த வீட்டில் தினம் தினம் ஒரு பிரச்சனைகள் வெடிக்கின்றது.

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சி தான் “பிக் பாஸ் சீசன் 6”. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்குவார். இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி மற்றும் கதிரவன் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். கடந்த வாரம் நடிகை மைனா வீட்டினுள் நுழைந்தார். இந்த “பிக் பாஸ் 6” சீசன் விறுவிறுப்பாக  நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி தினம் தோறும் ஒவ்வொரு பிரச்சனையுடன் புரோமோக்கள் வெளியாகின்றது.

இந்நிலையில் 12-வது நாளான இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோவில் விக்ரமனும் அசீமும் ஒருவருக்கொருவர் மாறிமாறி சண்டையிட்டுக் கொள்கின்றனர். மேலும் இந்த போட்டியில் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு ஏற்றவாறு வரிசைபடுத்தி கொள்ளுமபடி ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று போட்டியாளர்கள் அந்த இடத்திற்கு தகுதியானவர்கள் இல்லை என்று ஒவ்வொரு நபரும் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த “பிக்பாஸ் சீசன்-6” அதன்படி விக்ரமனை அசீம் தேர்வு செய்து, அவர் வந்ததிலிருந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று காரணம் சொல்கின்றார். ஒருவருக்கொருவர் மாறி மாறி வாதமிட்டுக்கொள்ள இந்த மோதல் முற்றி விக்ரமனை ஒருமையில் வாடா போடா என்று அசீம் பேச பிக்பாஸ் வீட்டினுள் பூகம்பம் வெடிக்கின்றது. இதோடு இந்த புரோமோ நிறைவடைந்து விடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலுக்கு பலரும் அவர்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |