விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி ஆரம்பித்து 59-வது நாட்களை வெற்றிகரமாக நெருங்கியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-6 தொடங்கியதிலிருந்து விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 59- நாட்களை நெருங்கியுள்ளது. பிக் பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுக்காகவே வாரந்தோறும் டாஸ்க் கொடுக்கப்படும்.
அதேபோன்று இந்த வாரம் போட்டியாளர்கள் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக இருந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும். பின்னர் அவர்களிடமிருந்து அதற்கேற்ற சன்மானத்தை பெற வேண்டும். இது குறித்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கதிர் டான்ஸில் வெளுத்து வாங்கியுள்ளார். எனவே போட்டியாளர்கள் கதிருக்கு ரூ. 9000 சன்மானம் கொடுக்கின்றார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.