விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது பிரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் வாரம் தோறும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அதேபோன்று இந்த வாரம் ட்விங்கிள் ட்விங்கிள் பெரிய ஸ்டார் நீங்க ஆக போறீங்க மக்களின் ஸ்டார் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரபலமான நடிகரின் கேரக்டர் மற்றும் காஸ்டியூம்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் வீடே அமர்க்களமாகவுள்ளது. சைக்கிள் ஜாக்சன், வக்கீல் கணேசன், கீதா தேவி, மாடன் மோகினி, மோசமணி மற்றும் பூனை சேகர் என பேமஸான கதாபாத்திரங்களை உல்டாவாங்கி கொடுத்துள்ளனர். இதில் ஏடிகே-வுக்கு நித்தியானந்தர் கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நித்தியானந்தரை போலவே உஸ் உஸ் என மந்திர வித்தையை காட்டி கலாட்டா செய்து வருகிறார்.
மேலும் நேற்றைய எபிசோடில் சைக்கிள் ஜாக்சனாக நடனமாடிய கதிர் ரூ. 9000 சன்மானமாக பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் காசு பணம் துட்டு மணி பாடலுக்கு நித்தியானந்தா கெட்டப்பில் இருக்கும் ஏடிகே செம குத்து டான்ஸ் ஆடுகிறார். இதனால் ஒட்டுமொத்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களும் அவருடன் இணைந்து ஆட்டம் போடுகிறார்கள். இந்த பிரோமோவை பார்த்த நெட்டிசன்கள் ஏடிகேவை காப்பாற்ற பிக் பாஸ் அவருக்கு நல்ல கேரக்டரை கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த வாரம் நாமினேஷனில் ஏடிகே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.