அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் சாயல்குடி அரசுப் பள்ளியில் திடீரென்று மேற்கூரை இடிந்து விழுந்ததில் நான்காம் வகுப்பு வைஷ்ணவி, இரண்டாம் வகுப்பு மாணவர் அகிலேஷ் ஆகியோரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி, பாடத்திட்டம் என கவனம் செலுத்தும் தமிழக அரசு இன்றைய அரசுப் பள்ளிகளிலும் கவனம் செலுத்தலாமே என்று கேள்வி எழுந்துள்ளது.