வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் – ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் 9ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. இருப்பினும் 11ஆம் தேதி அதிகாலை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வட தமிழகத்தை நோக்கி வரும் என்று கூறப்பட்டுள்ளது.. ஆனால் கரையை கடக்கும் இடம் தெளிவாக சொல்லப்படாமல் இருந்தது..
இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் எங்கே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது.. அதாவது, ஸ்ரீஹரிகோட்டாவிற்கும், காரைக்காலுக்கும் இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடலூர் அருகே கரையை கடந்தால் கூட ஆந்திரா, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்..
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்ற கேள்வி எழுந்தது.. ஆனால் இது புயலாக மாறாது என்று ஏற்கனவே விளக்கம் அளித்தது வானிலை ஆய்வு மையம்.. தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது..
தெற்கு ஆந்திரா, வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழையை கொடுத்துவிட்டு கடலூருக்கு அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.. இன்று 12 மணிக்கு மேல் ஒரு அறிக்கை வரும்.. அப்போது எங்கெங்கெல்லாம் அதிக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கும்..