காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று 129 பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு விமானம் 12.30க்கு காபூலுக்கு செல்ல இருந்தது. தற்போது அந்த விமான நிலையம் மூடப்பட்டதால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
காபூல் விமான நிலையத்தில் தற்போது விமானங்கள் தரை இறங்குவதற்கான வாய்ப்பு கள் முற்றிலுமாக இல்லை என்பதுதான் அங்கிருந்து வரக்கூடிய தகவலாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில்…. லட்சக்கணக்கில் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கக்கூடிய படைகள் ஆகட்டும், அமெரிக்கப் படைகள் ஆகட்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க கூடிய விஷயங்களை அவர்கள் செய்து வருகின்றார்கள். அதே நேரத்தில் தாலிபான்களும் பொதுமக்களை அந்த விமான நிலையத்திற்கு செல்ல கூடியவர்களை தாக்கக் கூடிய சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் காபூல் விமான நிலையத்தில் விமானங்களை பத்திரமாக தரை இறங்குவது என்பது இயலாத விஷயமாக மாறிவிட்டது.
காபூல் விமான ஓடு தளங்களிலும் மக்கள் அதிகளவில் இருப்பதால் விமானங்களை இயக்க வே முடியாத ஒரு சூழல் இருக்கிறது. காபூல் வான்வெளிகளும் தற்போது மூடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
பன்னிரண்டு முப்பது மணி அளவில் ஆப்கானிஸ்தானிற்கு செல்லவிருந்த அந்த சிறப்பு விமானம் ரத்து செய்யப்படுவதாக சொல்லியிருக்கிறார்கள். நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததற்குப் பிறகுதான் விமானத்தை இயக்க முடியும் என்பதை திட்டவட்டமாக ஏர் இந்தியா விமானம் கூறிவிட்டார்கள். இதனால் ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கக்கூடிய இந்தியர்கள் மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான பேர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டால் மீண்டும் விமானம் பத்திரமாக எடுத்து வர முடியுமா ? மீண்டும் அதனை இயக்க முடியுமா என்ற ஒரு விஷயம் இருக்கிறது.
அங்குள்ள பொதுமக்கள் ஒரு கொதி நிலையில் இருக்கிறார்கள். விமானத்திற்குள் எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. பாதுகாப்பு, செக்யூரிட்டி அல்லது ரேடார் உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்கு யாரும் இல்லாத சூழலில் அந்தப் பகுதிக்கு விமானத்தை இயக்குவது என்பது நிச்சயமாக இயலாத ஒரு விஷயம்.
ஹெலிகாப்டர் போன்றவற்றைக் கொண்டு தான் அமெரிக்கா தனது குடிமக்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டு வருகிறார்கள். ஆனால் அதிலும் தொய்வு நிலை ஏற்பட்டிருக்கக் கூடிய நிலையில் விமானத்தை இயக்குவது என்பது நிச்சயமாக முடியாது. அதே போல தற்போது அங்கு துப்பாக்கிச் சூடு மற்ற விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.