Categories
விளையாட்டு

BIG BREAKING: “ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது இந்தியா”… வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் கலந்து கொண்டவர் 23 வயதான இளம் வீரர் நீரஜ் சோப்ரா. ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். அரியானாவைச் சேர்ந்த தடகள வீரர், 86.65 மீட்டர் தூரத்தை எறிந்து தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார்.

இதையடுத்து கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா எப்படியும் பதக்கம் வென்று விடுவார் என்று உறுதியான நிலையில், இவர் அதிகபட்சமாக 87.58 மீட்டர் ஈட்டியை வீசி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதையடுத்து கலந்து கொண்ட எந்த வீரரும் இந்த இலக்கை எட்டவில்லை. தடகள போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா.

Categories

Tech |