ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (வயது 52) மாரடைப்பால் காலமானார். இவர் தாய்லாந்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 90-களில் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.