Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BIG BREAKING : குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்.!!

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார்.

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 11:47 மணியளவில் Mi -17 V5 ரக ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு புறப்பட்டு சென்றது.. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் ஹெலிகாப்டர்  கீழே விழுந்து தீ பற்றி எரிந்துள்ளது..  இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த பயங்கர விபத்தில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. தீ காயங்களுடன் மீட்கப்பட்ட ராணுவ கேப்டன் வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.. இந்திய விமானப்படை இந்த தகவலை டுவிட்டரில்  அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது..

Categories

Tech |