சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலை உதவி கண்காணிப்பாளர் லதா கோப்புகளை கொண்டு வந்து சசிகலாவிடம் கையொப்பம் வாங்கினார்.
அதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கக் கூடிய சசிகலாவின் உடைமைகள் அவருடைய உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகும் கூட நாளை முதல் தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலே இன்னும் சில நாட்களுக்கு சசிகலா சிகிச்சை பெறுவார் என தெரிகின்றது. மருத்துவமனை நிர்வாகம் தான் அவர் எப்போது டிச்சார்ஜ் செய்யப்படுவார் என முழுமையான முடிவெடுக்க முடியும்.
தொடர்ந்து அவருக்கு இன்று மாலை மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் இன்று மாலைக்குள் அவர் எப்போது சென்னை திரும்புவார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.