Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: சென்னையில் டெபாசிட்டை இழந்த அதிமுக…. வெற்றியை அலேக்காக தட்டி தூக்கிய திமுக….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த வார்டில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மகேஸ்வரி டெபாசிட்டை இழந்துள்ளார். சென்னை போன்ற மாநகரங்களில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது இதுவே முதல் முறையாகும். சென்னையை பொறுத்தவரையிலும் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 10 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி 1வது வார்டில் திமுக சிவகுமார், 8வது வார்டில் திமுகவின் ராஜகுமாரி வெற்றி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 29, 59, 94, 115, 121, 168, 174, 187 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

Categories

Tech |