தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 4.30 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். கன்னியாகுமரி எம்பி தொகுதிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். புதுச்சேரியிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். தொடர்ந்து ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மே 2ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.