தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து சட்டப்பேரவை தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படுகின்றது .
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட உள்ளார்.