முன்னாள் திமுக எம்பி மஸ்தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவரது சகோதரருடைய மருமகன் இம்ரான் தான் திட்டம் போட்டு திமுக எம்பி மஸ்தானை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. கடந்த 22 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற மஸ்தானை கூடுவாஞ்சேரி அருகே முகத்தை மூடி கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
Categories