தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து தீவிர புயல் சின்னமாக தெற்கு வங்கக்கடலில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிக பலத்த மழை காணா ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவும் வானிலை மாற்றத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு அடைமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.