Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

Big Breaking: நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி…. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது ….!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆளும் கட்சி சார்பில் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்க் கட்சியை சார்ந்த தரப்பில் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் என  சமபலத்துடன் இருந்தார்கள்.

இந்நிலையில் நேற்று ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்தார். இதேபோல் கூட்டணியில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம் 14 லிருந்து 12 குறைந்தது. மேலும் எதிர்க்கட்சித் தரப்பில் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இப்படியான பரபரப்பான சுழலில் இன்று காலை 10மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். பின்னர் அதில், காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியின் செயல்பாடு குறித்து பேசினார். பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து, கவிழ்ந்துள்ளது.

Categories

Tech |