தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திர கடலோர முதல் குமரி கடல் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் நவம்பர் 12 முதல் நவம்பர் 16-ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.